×

நீட், தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர் அமைப்பினர் பேரணி: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்.

சென்னை: united students of india என்ற கூட்டமைப்பினரால் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து INDIA கூட்டணியில் இருக்க கூடிய தமிழகம் முழுவதும் உள்ள 16 மாணவர் அமைப்பினர் பங்கேற்று இந்த மாணவர் பேரணியை இன்று சென்னை ராயபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். save education – reject national education policy என்ற முழக்கத்துடன் இந்த பேரணியானது நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் 1500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

INDIA கூட்டணியில் இருக்க கூடிய அனைத்து மாணவர் அமைப்பினர் தலைவர் நிர்வாகிகள் போன்ற அனைவரும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். தேசிய கல்வி கொள்கை, நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளை நிராகரிக்க வேண்டும் என வழியுறுத்தியும், பல்கலைகழக வேந்தராக ஆளுநர் இருக்க கூடாது என்பதை வழியுறுத்தியும் திமுக மாணவர் அணி சார்பாக இந்த united students of india என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பாட்டு 16-க்கும் மேற்பட்ட மாணவர் அனைப்பினர் இந்த பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர் அமைப்பினர் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த பேரணியில் திமுக மாணவர் அணி, திராவிடர் மாணவர் அணி, காங்கிரஸ் அமைப்பினர், இந்திய மாணவர் சங்கம், மதிமுக மாணவர் அணி, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லீம் மாணவர் பேரவை, சமூக நீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்புகள், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

The post நீட், தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர் அமைப்பினர் பேரணி: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர். appeared first on Dinakaran.

Tags : Ministers ,Udayanidhi ,Anpil Mahes ,Chennai ,Tamil Nadu ,NEET ,Anbil Mahes ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...